என் மலர்
இந்தியா

டெல்லி கார் வெடிப்பு சம்பவம்- 4 பேரை கைது செய்த போலீசார்
- ஹோட்டல்களில் இரவு முழுவதும் போலீசார் சோதனை நடத்தினர்.
- ஹோட்டல் பதிவேடுகளையும் போலீசார் சரிபார்த்தனர்.
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை கார் வெடித்து சிதறி 10 பேர் பலியானார்கள். மேலும் படுகாயமடைந்த 24 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை உஷார்படுத்தப்பட்டுள்ளது.
ரெயில், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், மத வழிபாட்டுதளங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, சதி செயலாக இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்த நிலையில் உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பஹர்கஞ்ச், தர்யாகஞ்ச் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் இரவு முழுவதும் போலீசார் சோதனை நடத்தினர். ஹோட்டல் பதிவேடுகளையும் போலீசார் சரிபார்த்தனர். அப்போது, சந்தேகப்படும்படியான 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






