என் மலர்

    இந்தியா

    தினசரி பாதிப்பு சற்று குறைந்தது- மேலும் 1,573 பேருக்கு கொரோனா
    X

    தினசரி பாதிப்பு சற்று குறைந்தது- மேலும் 1,573 பேருக்கு கொரோனா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 1,805 ஆக இருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.
    • கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 888 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 65 ஆயிரத்து 703 பேர் குணமடைந்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 1,805 ஆக இருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,573 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 7 ஆயிரத்து 525 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 888 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 65 ஆயிரத்து 703 பேர் குணமடைந்துள்ளனர்.

    தற்போது 10,981 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 681 அதிகமாகும். கொரோனா பாதிப்பால் நேற்று புதிய உயிரிழப்புகள் எதுவும் இல்லை. ஆனால் கேரளாவில் விடுபட்ட பலிகளில் 4-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,841 ஆக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×