என் மலர்
இந்தியா

2024-25ல் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதற்கு 6,372.8 கோடி ரூபாய் செலவு: ஆர்பிஐ
- 500 ரூபாய் நோட்டுகள் 40.9 சதவீதம் புழக்கத்தில் இருந்தது.
- 10 ரூபாய், 20 ரூபாய் மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் 31.7 சதவீதம் புழக்கத்தில் இருந்தாகவும் தெரிவித்துள்ளது.
2023-24 நிதியாண்டில் பணம் நோட்டுகள் அச்சடிப்பதற்கு 5101.4 கோடி ரூபாய் செலவான நிலையில், 2024-25 நிதியாண்டில் 25 சதவீதம் அதிகரித்து 6372.8 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புழக்கத்தில் உள்ள பண மதிப்பு 6 சதவீதம் அதிகரித்துள்ளது. நோட்டுகளின் அளவு 5.6 சதவீதம் 2024-25 நிதியாண்டில் அதிகரித்துள்ளது.
500 ரூபாய் நோட்டுகள் 40.9 சதவீதம் புழக்கத்தில் இருந்ததாகவும், 10 ரூபாய் நோட்டுகள் 16.4 சதவீதம் புழக்கத்தில் இருந்தாகவும் வருடாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.
10 ரூபாய், 20 ரூபாய் மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் 31.7 சதவீதம் புழக்கத்தில் இருந்தாகவும் தெரிவித்துள்ளது. ஆர்பிஐ கடந்த 2023ஆம் ஆண்டு 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்தது. அப்போது சுமார் 3.56 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருந்தது. அதில் கடந்த மார்ச் 31ஆம் தேதி வரையில் 98.2 சதவீதம் வங்கிக்கு திரும்பியுள்ளது.
நாணயங்கள் மதிப்பு மற்றும் அளவில் முறையே 9.6 சதவீதம், 3.6 சதவீதம் அதிகரித்துள்ளது. எலக்ட்ரானிக் பணம் (e-rupee) மதிப்பு 334 சதவீதம் அதிகரித்துள்ளது.
தற்போது 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய், 20 ரூபாய், 50 7பாய், 100 ரூபாய், 200 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது. இதில் 2 ரூபாய், 5 ரூபாய் நோட்டுகளை ஆர்பிஐ அச்சிடுவதில்லை. 50 பைசா, 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன.






