search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முஸ்லிம் லீக் குறித்து மோடி பேச்சு: வரலாறு தெரியவில்லை என காங்கிரஸ் பதிலடி
    X

    முஸ்லிம் லீக் குறித்து மோடி பேச்சு: வரலாறு தெரியவில்லை என காங்கிரஸ் பதிலடி

    • முஸ்லிம் லீக்கின் சிந்தனை ஒத்துடையதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது- மோடி
    • வங்காளத்தில் முஸ்லிம் லீக்குடன் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்தவர், அப்போது இந்து மகாசபையின் தலைவரான முகர்ஜி- காங்கிரஸ்

    பிரதமர் மோடி இன்று உத்தர பிரதேச மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில் "காங்கிரஸ் கட்சி நேற்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் இருந்த முஸ்லிம் லீக்கின் சிந்தனையுடன் ஒத்துடையதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது. மேலும் கம்யூனிஸ்டு மற்றும் இடது சாரி சிந்தனைகள் மேலோங்கி உள்ளது" என்று தெரிவித்திருந்தார்.

    இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடிக்கு அவருடைய வரலாறு தெரியவில்லை என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் இது தொடர்பாக கூறுகையில் "பிரதமர் மோடிக்கு அவருடைய வரலாறு தெரியவில்லை. உண்மையில், வங்காளத்தில் முஸ்லிம் லீக்குடன் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்தவர், அப்போது இந்து மகாசபையின் தலைவரான முகர்ஜியைத் தவிர வேறு யாரும் இல்லை. பிரித்தாளும் அரசியலை நம்புவதும் நடைமுறைப்படுத்துவதும் பாஜக-தான், காங்கிரஸ் அல்ல." எனத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×