என் மலர்tooltip icon

    இந்தியா

    இரண்டு தொகுதிகளின் இடைத் தேர்தலுக்கு காங்கிரஸ் தயார்: சித்தராமையா
    X

    இரண்டு தொகுதிகளின் இடைத் தேர்தலுக்கு காங்கிரஸ் தயார்: சித்தராமையா

    • இடைத் தேர்தலுக்கான தேதி இன்னும் ஒரு சில தினங்களில் அறிவிக்கப்படலாம்.
    • இரண்டு தொகுதிகளிலும் ஏற்கனவே காங்கிரஸ் கட்சிதான் வெற்றி பெற்றிருந்தது.

    கர்நாடக மாநிலத்தில சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள பாகல்கோட் மற்றும் தாவணகரே தெற்கு ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன.

    இரண்டு தொகுதிகளும் காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதியாகும். இரண்டு தொகுதி எம்.எல்.எ.-க்களும் உயிரிழந்த காரணத்தினால் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

    அடுத்த மாதம் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது.

    இடைதேர்தலுக்கு தயார்

    இந்த நிலையில் இடைத்தேர்தலுக்கு தயார் என சித்தராமையா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சித்தராமையா கூறுகையில் "இடைத்தேர்தலுக்கு தயாராகும் பணி முடிவடைந்துள்ளது. இடைத்தேர்தலுக்கு நாங்கள் தயார்" என்றார்.

    பாகல்கோட் தொகுதியில் மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. மேதி, பாஜக-வின் வீரண்ணா சரந்திமாத்தை 5878 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

    தாவணகரே தெற்கு தொகுதியில் மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவசங்கரப்பா பாஜக-வின் பி.ஜி. அஜய் குமாரை 27,888 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

    Next Story
    ×