என் மலர்tooltip icon

    இந்தியா

    பிளாஸ்டிக் இல்லாத பேனாவை கண்டுபிடித்த கல்லூரி மாணவி
    X

    பிளாஸ்டிக் இல்லாத பேனாவை கண்டுபிடித்த கல்லூரி மாணவி

    • பிளாஸ்டிக் இல்லாத, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இல்லாத புதிய வகை பேனாவை கண்டுபிடிக்க அமலா தீர்மானித்தார்.
    • புதிய கண்டுபிடிப்புக்கு அரசு ரூ.2 லட்சம் பரிசு வழங்கியது.

    கேரள மாநிலம், தொடுபுழா அருகே உள்ள மூலமட்டம் பகுதியை சேர்ந்தவர் அமலா (வயது 25). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

    தற்போது பயன்பாட்டில் உள்ள பேனாக்கள் அனைத்தும் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டுள்ள நிலையில், பிளாஸ்டிக் இல்லாத, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இல்லாத புதிய வகை பேனாவை கண்டுபிடிக்க அமலா தீர்மானித்தார். தொடர்ந்து இது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    அதன் பயனாக பிளாஸ்டிக் இல்லாத புதிய பேனாவை அவர் கண்டுபிடித்தார். இந்த பேனாவுக்கு அரசின் தகுதி சான்றிதழ் நேற்று கிடைத்தது. மேலும் இந்த புதிய கண்டுபிடிப்புக்கு அரசு ரூ.2 லட்சம் பரிசு வழங்கியது. ரூ.15, ரூ.20 ஆகிய விலைகளில் 2 வகையான பேனாக்களை அமலா உருவாக்கியுள்ளார். விரைவில் இந்த பேனாக்கள் விற்பனைக்கு வர உள்ளது.

    Next Story
    ×