என் மலர்
இந்தியா

பிரதமர் மோடியுடன் சத்தீஸ்கர் முதல் மந்திரி சந்திப்பு
- சத்தீஸ்கரில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது.
- விஷ்ணு தியோ சாய் முதல் மந்திரியாக பதவியேற்றார்.
புதுடெல்லி:
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் 54 இடங்களைக் கைப்பற்றி பா.ஜ.க. பெரும்பான்மையுடன் அபார வெற்றி பெற்றது.
முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட விஷ்ணு தியோ சாய், கடந்த 13-ம் தேதி முதல் மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார். மேலும், துணை முதல் மந்திரிகளாக விஜய் சர்மா மற்றும் அருண் சாவ் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரியாக பதவியேற்றுக் கொண்ட விஷ்ணு தியோ சாய் இன்று தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். அப்போது துணை முதல் மந்திரிகளும் உடனிருந்தனர்.
Next Story






