என் மலர்tooltip icon

    இந்தியா

    சந்திரபாபு நாயுடுவுக்கு 2 நாள் சிஐடி காவல்- சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
    X

    சந்திரபாபு நாயுடுவுக்கு 2 நாள் சிஐடி காவல்- சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

    • சந்திரபாபு நாயுடுவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
    • விசாரணை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு.

    தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்-அமைச்சருமான சந்திரபாபு நாயுடு ரூ.371 கோடி திறன்மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    சந்திரபாபு நாயுடுவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனு லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, சந்திரபாபு நாயுடுவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிஐடி போலீசார் சார்பில் வாதம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவுக்கு 2 நாள் சிஐடி காவலில் வைக்க லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

    விசாரணை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் விசாரணையின்போது ஒன்று அல்லது 2 வழக்கறிஞர்களை அனுமதிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×