என் மலர்tooltip icon

    இந்தியா

    இரண்டு முறை சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: தகுதி அளவுகோல், முக்கிய விதிகள்..!
    X

    இரண்டு முறை சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: தகுதி அளவுகோல், முக்கிய விதிகள்..!

    • பிப்ரவரி மற்றும் மே மாதம் தேர்வு நடத்தப்படும்.
    • முதல் பொதுத்தேர்வை கட்டாயம் மாணவர்கள் எழுத வேண்டும்.

    10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

    தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் பின் வருமாறு:-

    * அனைத்து மாணவர்களும் முதல் பொதுதேர்வை கட்டாயம் எழுத வேண்டும்.

    * முதல் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், 2ஆவது பொதுத்தேர்வு எழுத தகுதி பெறுவார்கள்.

    * அவர்கள் கூடுதல் மதிப்பெண் பெறுவதற்காக மூன்று பாடங்களை எழுதலாம்.

    * முதல் பொதுத்தேர்வில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களை புறக்கணிக்கும் மாணவர்கள் அத்தியாவசிய ரிபீட் (Essential Repeat) ஆக கருதப்படுவார்கள். அவர்கள் அடுத்த பிப்ரவரி மாதம் நடைபெறும் பொதுத்தேர்வைதான் எழுத முடியும்.

    * 10ஆம் வகுப்பு தேர்ச்சிக்குப்பின் கூடுதல் பாடங்கள் கிடையாது. தனிப்பாடம் ஆப்சனும் வழங்கப்படாது.

    சிறப்பு சலுகை

    * விளையாட்டில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு, முதல் தேர்வின்போது போட்டிகள் இருந்தால், 2ஆவது தேர்வின்போது தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

    * குளிர்காலத்தால் பாதிக்கப்படும் பள்ளி மாணவர்கள் முதல் அல்லது 2ஆவது பொதுத்தேர்வு ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்யலாம்.

    * சிறப்பு தேவை அவசியம் என்ற மாணவர்களுக்கு அது வழங்கப்படும். 2ஆவது பொதுத்தேர்வுக்கும் அது பொருந்தும்.

    பிப்ரவரி மாதம் நடைபெறும் தேர்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள் மதிப்பீடு (Internal assessment) தேர்வு நடத்தப்படும்.

    முதல் பொதுத்தேர்வு பிப்ரவரி மத்தியில் இருந்து தொடங்கும்.

    2ஆவது பொதுத்தேர்வு மே மாதத்தில் நடைபெறும்.

    முதல் பொதுத்தேர்வு

    புதிய 10ஆம் வகுப்பு மாணவர்கள்தான் முதல் பொத்தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அத்தியாவசிய ரிபீட் (Essential Repeat) மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தேர்ச்சி பெறாத மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    2ஆவது பொத்தேர்தல்

    அதிக மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்கள் 3 பாடத்திற்கான திரும்ப எழுதலாம். முதல் மற்றும் 3ஆவது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் எழுதலாம்.

    பாடத்திட்டம் மற்றும் தேர்வு முடிவுகள்

    இரண்டு தேர்வுகளுக்கும் முழு ஆண்டு பாடத்திட்டம் அடங்கும்.

    படிப்பு, தேர்வு திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது.

    முதல் தேர்வின் முடிவு ஏப்ரல் மாதம் வெளியாகும். 2ஆவது தேர்வின் முடிவு ஜூன் மாதம் வெளியாகும்.

    Next Story
    ×