என் மலர்
இந்தியா

பெங்களூருவில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
- கர்நாடகாவில் விவசாயிகள் மற்றும் பல்வேறு கன்னட அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.
- விவசாயிகள் போராட்டம் காரணமாக கர்நாடகாவில் உள்ள 5 மாவட்டங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு:
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் விவசாயிகள் மற்றும் பல்வேறு கன்னட அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது. இதன் காரணமாக பெங்களூருவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான இந்திரா நகர், பிரகாஷ் நகர், ஸ்ரீராமபுரா உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகள் போராட்டம் காரணமாக கர்நாடகாவில் உள்ள 5 மாவட்டங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story






