என் மலர்tooltip icon

    இந்தியா

    மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    X

    மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    • அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.
    • இந்த கூட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல்.

    பிரதமர் மோடி தலைமையில் இன்று மதியம் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தகவல் வெளியானது.

    இந்த நிலையில் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்து வருகிறார். அப்போது மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

    மேலும் இது தொடர்பாக அமைச்சர் கூறுகையில் "மத்திய அரசின் கீழ் கணக்கெடுப்பு வருகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் ஆட்சிகள் செய்யும் மாநிலங்களில் சாதிவாரி என்ற பெயரில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அரசியல் காரணத்திற்காக அந்த கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை உள்ளடக்கிய, நாடு தழுவிய மக்கள் தொகை கணக்கெடுப்பை வெளிப்படையாக நடத்த மோடி அரசு உறுதி பூண்டுள்ளது" என்றார்.

    1931ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி 4,147 சாதிகள் இருந்ததாக புள்ளி விவரத்தில் தகவல். தற்போது வரை 1931ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி இட ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டில் சமூக பொருளாதார ரீதியில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் புள்ளி விவரங்கள் வெளியிடப்படவில்லை.

    Next Story
    ×