என் மலர்
இந்தியா

சோனியா காந்தி குறித்து அவதூறு பேச்சு: ஆந்திர துணை முதல்-மந்திரி மீது வழக்கு பதிவு
- ஆந்திர காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லு ரவி பேகம் பஜார் போலீசில் புகார் செய்தார்.
- போலீசார் 2 பிரிவுகளில் நாராயணசாமி மீது வழக்கு பதிவு செய்தனர்.
திருப்பதி:
ஆந்திரமாநில துணை முதல் மந்திரியாக இருப்பவர் நாராயணசாமி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி குறித்து அவதூறு பேசியதாக ஆந்திர காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லு ரவி பேகம் பஜார் போலீசில் புகார் செய்தார்.
புகாரில் கூறியிருப்பதாவது, ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்தபோது ஓஎஸ் ராஜசேகர் ரெட்டி முதல் மந்திரியாக இருந்தார். அவர் கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் 2-ந் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார்.
அவரது இறப்பிற்கு சோனியா காந்தியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் தான் காரணம் என அவதூறாக பேசி இருக்கிறார். எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியிருந்தார்.
இதையடுத்து போலீசார் 2 பிரிவுகளில் நாராயணசாமி மீது வழக்கு பதிவு செய்தனர்.
Next Story






