என் மலர்
இந்தியா

கார் டயரில் சிக்கி தொண்டர் பலி - ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது வழக்கு பதிவு
- ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தொண்டர் கார் டயரில் சிக்கி உயிரிழந்தார்.
- ஜெகன் மோகன் ரெட்டியின் கார் டிரைவர் ரமண ரெட்டி என்பவரை கைது செய்தனர்.
ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் கார் கான்வாயில் ஏற்பட்ட விபத்தில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர் செலி சிங்கையா (வயது 62) என்பவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் கடந்த ஜூன் 18ம் தேதி அன்று குண்டூர் மாவட்டத்தில் உள்ள எடுகூரு கிராமத்திற்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாக பரவியது.
இதனையடுத்து, போலீசார் ஜெகன் மோகன் ரெட்டியின் கார் டிரைவர் ரமண ரெட்டி என்பவரை கைது செய்தனர். மேலும் ஜெகன் மோகன் ரெட்டி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்
ஜெகன் மோகன் ரெட்டியின் தனி உதவியாளர் கே.நாகேஷ்வர் ரெட்டி, ஒய்.வி.சுப்பாரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ. பெர்னி வெங்கடராமையா, முன்னாள் அமைச்சர் விடடலா ரஜினி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் உரிய நடைமுறை மற்றும் பொருந்தக்கூடிய சட்ட விதிகளின்படி சட்ட நடவடிக்கை தொடரும் என்று எஸ்.பி. குமார் கூறினார்.






