என் மலர்
இந்தியா

ஆந்திராவில் இருந்து திருவண்ணாமலை கோவிலுக்கு வந்த தாய்-மகன் விபத்தில் உயிரிழப்பு
- காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர் காரை வெங்கடேஸ்வர ராவ் ஓட்டி சென்றார்.
- ஜஸ்வந்த் சாய் மற்றும் ஹேமலதா படுகாயம் அடைந்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், விஜயவாடா, சிண்டிகேட் வங்கி காலனியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வர ராவ். இவரது மனைவி பத்மாவதி (வயது 38). மகன் ஜஸ்வந்த் சாய் மற்றும் சகோதரி ஹேமலதா.
இவர்கள் 4 பேரும் காரில் திருப்பதி வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர். பின்னர் திருவண்ணாமலைக்கு வந்தனர். அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை தரிசனம் செய்தனர். பின்னர் காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர் காரை வெங்கடேஸ்வர ராவ் ஓட்டி சென்றார்.
இவர்கள் சென்ற கார் திருப்பதி அடுத்த சந்திரகிரி, தோண்டவாடா என்ற இடத்தில் சென்றபோது முன்னால் சென்ற பால் டேங்கர் லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் பத்மாவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஜஸ்வந்த் சாய் மற்றும் ஹேமலதா படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த பாஹரா பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ரூயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜஸ்வந்த் சாய் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






