search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    6 மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு
    X

    6 மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

    • இடைத்தேர்தலுக்கான அறிவிப்பாணை நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது.
    • நாளை மறுநாள் தொடங்கி 17ம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.

    புதுடெல்லி:

    ஜார்க்கண்ட், கேரளா, திரிபுரா, மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் செப்டம்பர் 5ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இடைத்தேர்தலுக்கான அறிவிப்பாணை நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது. அன்றே வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. 17ம் தேதி வரை மனுக்களை தாக்கல் செய்யலாம். ஆகஸ்ட் 18ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. மனுக்களை திரும்ப பெற விரும்புவோர் ஆகஸ்ட் 21ம் தேதிக்குள் திரும்ப பெறவேண்டும். செப்டம்பர் 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. செப்டம்பர் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

    Next Story
    ×