என் மலர்tooltip icon

    இந்தியா

    அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு முதியவர் பலி
    X

    அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு முதியவர் பலி

    • மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சையில் இருந்து வந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
    • சச்சிதானந்தத்தின் வீட்டு கிணற்று நீரின் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமீபிக் மூளைக்காய்ச்சல் பரவத்தொடங்கியது. இந்த காய்ச்சலுக்கு பலர் இறந்துவிட்ட நிலையில், கோழிக்கோடு புதியங்காடி பகுதியை சேர்ந்த சச்சிதானந்தன்(வயது72) என்ற முதியவர் தற்போது இறந்திருக்கிறார்.

    மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சையில் இருந்து வந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு இந்த நோய் எப்படி பரவியது? என்பது தெரியவில்லை.

    இதற்காக சச்சிதானந்தத்தின் வீட்டு கிணற்று நீரின் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் அமீபிக் மூளைக் காய்ச்சலுக்கு இதுவரை 40 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×