என் மலர்tooltip icon

    இந்தியா

    பள்ளிக் கழிவறையில் வைத்து சிறுவன் பாலியல் வன்கொடுமை.. சக மாணவன் கைது
    X

    பள்ளிக் கழிவறையில் வைத்து சிறுவன் பாலியல் வன்கொடுமை.. சக மாணவன் கைது

    • 14 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக போலீசார் தெரிவித்தனர்.
    • சிறுவனுக்கு கவுன்சலிங் கொடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    டெல்லியில் உள்ள ஒரு பள்ளியில் சக மாணவனால் 14 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த மாதம் 24 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் பள்ளி கழிப்பறையில் 14 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக போலீசார் தெரிவித்தனர்.

    சிறுவன் வலியை அனுபவித்து வந்துள்ளான், பெற்றோர் அவனிடம் கேட்டபோது, அவன் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்துள்ளான். பெற்றோர் போலீசிடம் புகார் அளித்தனர்.

    பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கவுன்சலிங் கொடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவரிடமிருந்து மருத்துவ சான்றிதழைப் பெற்ற பிறகு, சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை போலீசார் உறுதிப்படுத்தினர்.

    போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட சிறுவனின் வகுப்புத் தோழன் கைது செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    Next Story
    ×