என் மலர்
இந்தியா

ஐதராபாத் ராணுவ பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
- பள்ளி வளாகத்தில் வெடிபொருட்கள் புதைக்கப்பட்டிருப்பதாக தகவல்.
- மாணவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பதி:
ஐதராபாத் போலாரத்தில் ராணுவ பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிக்கு நேற்று ஆன்லைன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதில் பள்ளி வளாகத்தில் வெடிபொருட்கள் புதைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக பள்ளி கட்டிடத்தை காலி செய்து மாணவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். நிலைமை குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரிவான சோதனைக்கு பிறகு வெடிகுண்டு ஏதும் இல்லை என்பதை போலீசார் உறுதி செய்தனர். பள்ளி நிர்வாகம், ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story