என் மலர்
இந்தியா

பெங்களூரு விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்- கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பு
- விமானத்தில் இருந்து பயணிகள் அவசர அவசரமாக இறக்கிவிடப்பட்டனர்.
- 3 மணி நேர தாமதத்துக்கு பிறகு அந்த விமானம் பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு தனியார் நிறுவன விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் 138 பயணிகள் இருந்தனர். மேலும் ஒரு கைக்குழந்தையும் இருந்தது. இந்நிலையில் அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து விமானத்தில் இருந்து பயணிகள் அவசர அவசரமாக இறக்கிவிடப்பட்டனர். அவர்கள் விமான நிலையத்தில் தங்க வைப்பட்டனர்.
இதையடுத்து அந்த விமானத்தில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் சோதனை செய்தனர். ஆனால் விமானத்தில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 மணி நேர தாமதத்துக்கு பிறகு அந்த விமானம் பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றது. விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.






