search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மணிப்பூர் கலவரத்தால் வீடுகளை விட்டு வெளியேறியவர்களுக்கு ரெடிமேட் வீடுகள்: முதல்-மந்திரி அறிவிப்பு
    X

    மணிப்பூர் கலவரத்தால் வீடுகளை விட்டு வெளியேறியவர்களுக்கு 'ரெடிமேட்' வீடுகள்: முதல்-மந்திரி அறிவிப்பு

    • கலவரத்தால் மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.
    • 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்.

    இம்பால் :

    மணிப்பூரில் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடிக்கும் கலவரத்தால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த முகாம்களை மாநில முதல்-மந்திரி பைரேன் சிங் நேற்று பார்வையிட்டார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'கலவரத்தால் மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். நிவாரண முகாம்களில் தங்கியிருப்பவர்களை தங்கள் சொந்த இடங்களில் தங்க வைப்பதற்கு அரசு ஏற்பாடுகளை செய்யும்வரை அவர்களுக்கு ரெடிமேட் வீடுகளை வழங்க உள்ளது. இதற்காக 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வீடுகள் கட்டப்படும். அதற்கான தளவாடங்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு உள்ளன' என்றார்.

    இந்த தளவாடங்கள் 2 வாரங்களுக்குள் இம்பால் வந்து சேரும் எனக்கூறிய அவர், இந்த வீடுகளை அமைப்பதற்கான இடத்தை அரசு பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார்.

    இம்பால் மேற்கு மாவட்டத்தில் துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தது குறித்து பைரேன் சிங் கூறுகையில், 'வன்முறையை நிறுத்துங்கள். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். மக்களையும் கேட்டுக்கொள்கிறேன், ஆயுதங்களுடன் இருக்கும் மெய்தி இனத்தினரையும் கேட்டுக்கொள்கிறேன், தாக்குதல்களை விட்டுவிட்டு அமைதியின் பாதைக்கு திரும்புங்கள். அப்போதுதான் மாநிலத்தில் இயல்பு நிலையை கொண்டு வர முடியும்' என்றும் கேட்டுக்கொண்டார்.

    Next Story
    ×