என் மலர்
இந்தியா

பீகார் தேர்தல்: என்.டி.ஏ. வேட்பாளர்களை எதிர்த்து போட்டி- எம்.எல்.ஏ. உள்பட 6 தலைவர்களை நீக்கியது பாஜக
- என்டிஏ வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட மனுதாக்கல்.
- கட்சியின் சித்தாந்தத்திற்கு எதிராக செயல்பட்டதாக நடவடிக்கை.
பீகாரில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, நிதிஷ் குமாரின் ஆர்.ஜே.டி. கட்சிகள் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. சிராக் பஸ்வான் கட்சி 29 இடங்களில் போட்டியிடுகிறது.
போட்டியிட வாய்ப்பு கிடைக்காத தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் கட்சி அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களை வாபஸ் செய்யுமாறு கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டும், அவர்கள் வாபஸ் பெற மறுத்துவிட்டனர்.
கஹல்கான் தொகுதி எம்.எல்.ஏ.-வாக இருப்பவர் பவன் யாதவ். இவருக்கு பாஜக மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை. அவர் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுகிறார்.
அதேபோல் சன்னி யாதவ், ஷ்ரவன் குஷ்ஹகா, உத்தம் சவுத்ரி, மாருதி நந்தன் மாருதி மற்றும் பவன் சவுத்ரி ஆகியோரும் கட்சிக்கு எதிராக செயல்பட்டதால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய கட்சி உறுபினரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.






