search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சந்திரயான் 3 - வெறும் டீசர் தான்.. இஸ்ரோவின் அடுத்த டார்கெட் இது தான்..!
    X

    சந்திரயான் 3 - வெறும் டீசர் தான்.. இஸ்ரோவின் அடுத்த டார்கெட் இது தான்..!

    • வரும் நாட்களில் இஸ்ரோ பல திட்டங்களை செயல்படுத்த போகிறது
    • மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டிருக்கிறது

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் திட்டப்படி நிலவிற்கு ஏவப்பட்ட சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை தொடர்ந்து இஸ்ரோ வரும் நாட்களில் மேற்கொள்ள இருக்கும் திட்டங்கள் இந்தியர்கள் மேலும் பெருமைப்படும் வகையில் உள்ளது.

    அவற்றில் சில திட்டங்களின் விவரங்கள்:

    1) ஆதித்யா எல் 1 (2023) - உத்தேச திட்ட செலவு - ரூ.378 கோடி

    சூரிய மண்டலத்தை நோக்கி பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் ஒரு ஆராய்ச்சி கூடத்திற்கு நிகராக இந்த விண்கலம் அமையும். கிரகணங்களின் பாதிப்புகள் இல்லாத வகையில் சூரியனை இது தொடர்ந்து ஆய்வு செய்யும். சூரியனின் வெளிப்புறம் உள்ள மண்டலம் குறித்தும் சூரிய புயலின் வேகம் உட்பட பல நுட்பமான ஆராய்ச்சிகளை மேற்கொள்வது தான் இதன் நோக்கம்.

    2) நாசா-இஸ்ரோ சார் (நிஸார்) (2024) - உத்தேச திட்ட செலவு - ரூ.12 ஆயிரம் கோடி

    இது இந்தியாவின் இஸ்ரோ மற்றும் அமெரிக்காவின் நாசா இணைந்து உருவாக்கும் ஒரு குறைவான உயரத்தில் அமைய போகும் ஆராய்ச்சி மையம். பூமியின் நுட்பமான இயக்கங்களை 12 நாட்களிலேயே இதனால் பதிவு செய்ய முடியும். இது இந்தியாவின் சதீஷ் தவான் ஆராய்ச்சி மையத்திலிருந்து ஏவப்பட இருக்கிறது.

    3) ஸ்பேடக்ஸ் (2024 பிற்பகுதி) - உத்தேச திட்ட செலவு - ரூ.124 கோடி

    இது ஒரு இரட்டை விண்கல திட்டம். சேசர் மற்றும் டார்கெட் என இரண்டு விண்கலங்கள் இரண்டு வெவ்வேறு சுற்றுவட்ட பாதையில் செலுத்தப்பட்டு நிலைநிறுத்தப்படும். இவ்விரண்டும் சதீஷ் தவான் ஆராய்ச்சி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலமாக இயக்கப்படும்.

    4) மங்கள்யான்-2 (2024) - உத்தேச திட்ட செலவு - அறிவிக்கப்படவில்லை

    அதி உயர் தொழில்நுட்ப கேமரா பதிக்கப்பட்ட இந்த ஆராய்ச்சி விண்கலம் செவ்வாய் கிரகத்தை குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்பப்படும்.

    5) ககன்யான் (2024 பிற்பகுதி) - உத்தேச திட்ட செலவு - ரூ.9023 கோடி

    இது மனிதரை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் பெருமைமிகு திட்டம்.

    6) சுக்ரயான் 1 (2031) - உத்தேச திட்ட செலவு - ரூ.1000 கோடி

    பூமியில் இருந்து சுக்ரனுக்கு விண்கலம் அனுப்ப தேவைப்படும் சாதகமான அறிவியல்பூர்வமான சூழ்நிலை 19 மாதங்களுக்கு ஒரு முறைதான் ஏற்படும். எனவே 2031ம் வருடம்தான் இதற்கு சரியான காலகட்டம் என விஞ்ஞானிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

    Next Story
    ×