என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவின் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் தள்ளி வைப்பு
    X

    இந்தியாவின் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் தள்ளி வைப்பு

    • மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்கான தேர்வான வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா.
    • வருகிற 29-ந்தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் பெல்கான் ராக்கெட் மூலம் விண்வெளி செல்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்திய விண்வெளி கழகமான இஸ்ரோ, அமெரிக்க விண்வெளி கழகமான நாசா ஆகியவை இணைந்து ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப திட்டமிட்டு இருந்தது.

    இந்த திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா தேர்வு செய்யப்பட்டார். மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்கான தேர்வான வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா, அனுபவ பயிற்சி நோக்கங்களுக்காக ஆக்ஸியம் திட்டம் மூலம் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அவருடன் மேலும் 3 விண்வெளி வீரர்கள் செல்ல உள்ளனர்.

    வருகிற 29-ந்தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் பெல்கான் ராக்கெட் மூலம் விண்வெளி செல்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் ஏவப்பட இருந்த நிலையில், தற்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பயணம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் மீண்டும் வருகிற ஜூன் 8-ந்தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×