என் மலர்tooltip icon

    இந்தியா

    சிறுநீர் குடிக்க வைத்து சிறுமிக்கு சித்ரவதை: சித்தி கைது
    X

    சிறுநீர் குடிக்க வைத்து சிறுமிக்கு சித்ரவதை: சித்தி கைது

    • சிறுமிக்கு சித்தி பல்வேறு விதத்தில் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.
    • போலீசார் சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    கொச்சி :

    கேரள மாநிலம் கொச்சி அருகே பரவூர் பகுதியில் வசிப்பவர் ரம்யா (வயது 32). ஆஷா பணியாளர். இவர் ரவி என்பவரை திருமணம் செய்தார். ஏற்கனவே ரவிக்கு திருமணமாகி, மனைவி இறந்து விட்டார். அவருக்கு 11 வயதான மகள் உள்ளாள். இதற்கிடையே ரம்யா, ரவி மகளிடம் கண்டிப்புடன் நடந்து வந்தார். சிறுமிக்கு பல்வேறு விதத்தில் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

    இந்தநிலையில் கடந்த 10 நாட்களாக சிறுமியை சிறுநீர் குடிக்க வைத்து ரம்யா கொடுமைப்படுத்தி உள்ளார். தகவல் அறிந்த கொச்சி போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் சித்தி சிறுமியை கொடுமைப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்ததாக கூறினாள். இதைதொடர்ந்து போலீசார் சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் ரம்யாவை கைது செய்தனர்.

    Next Story
    ×