என் மலர்
இந்தியா

ஆந்திரா: கிரானைட் குவாரியில் பயங்கர விபத்து - 6 தொழிலாளர்கள் பலி - 16 பேர் படுகாயம்
- இறந்தவர்கள் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
- இறந்தவர்கள் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
ஆந்திர பிரதேச மாநிலம் பாபட்லா மாவட்டத்தின் பல்லிகுரவா பகுதியில் கிரானைட் குவாரியில் பாறைகள் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர்.
இறந்தவர்கள் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய காயமடைந்த தொழிலாளர்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
Next Story






