என் மலர்
இந்தியா

ஆந்திராவில் மது போதையில் அரசு பஸ்சை கடத்திய முதியவர்
- பஸ் நிலையத்தில் மது போதையில் இருந்த முதியவர் பஸ்சில் ஏறி டிரைவர் சீட்டில் உட்கார்ந்தார்.
- பஸ்சில் இருந்த நபரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், ஒங்கோல் பஸ் நிலையத்தில் அரசு பஸ்சை நிறுத்தி வைத்திருந்தனர். கண்டக்டர், டிரைவர் இருவரும் சாவியை பஸ்சிலேயே விட்டு விட்டு ஓய்வு அறைக்கு சென்றனர்.
அப்போது பஸ் நிலையத்தில் மது போதையில் இருந்த முதியவர் பஸ்சில் ஏறி டிரைவர் சீட்டில் உட்கார்ந்தார்.
பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் பஸ்சை வேகமாக ஓட்டி சென்றார்.
முதியவர் பஸ்சை கடத்திச் செல்வது குறித்து பஸ் நிலையத்தில் உள்ள புறக் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் உடனடியாக வேனில் பஸ்சை விரட்டி சென்றனர்.
முதியவர் பஸ்சை தாறுமாறாக வேகமாக ஓட்டி சென்றார். பின்னர் ஒரு வழியாக ஒங்கோல்-கர்னூல் இடையே உள்ள மேம்பாலத்தில் பஸ்சை மடக்கி பிடித்தனர்.
பஸ்சில் இருந்த நபரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் பஸ்சை விபத்தில் சிக்காமல் ஓட்டி சென்றதால் போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் நிம்மதி பெரு மூச்சு விட்டனர்.
டிரைவரின் அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பஸ்சை மீட்ட அதிகாரிகள் அதை போக்குவரத்து பணிமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






