என் மலர்
இந்தியா

அஜித் பவாரின் இறுதிச் சடங்கு நாளை நடைபெறுகிறது: பிரதமர் மோடி, அமித் ஷா பங்கேற்பு
- மகாராஷ்டிரா அரசு இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது.
- அரசு முழு மரியாதை உடன் இறுதிச் சடங்கு நடைபெற இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரான அஜித் பவார் இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்தார். மும்பையில் இருந்து தனி விமானத்தில் பாராமதிக்கு புறப்பட்டுச் சென்றார். பாராமதியில் தரையிறங்கும்போது, தரையில் மோதி விமானம் விபத்துக்குள்ளானது. அஜித் பவாருடன் மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர்.
அவரது மறைவுக்கு தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அஜித் பவாரின் இறுதிச் சடங்கு நாளை முழு அரசு மரியாதையுடன் நடைபெற இருக்கிறது. இதில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா கலந்து கொள்ள இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். அவருக்கு பார்த் மற்றும் ஜெய் என இரண்டு மகன்கள் உள்ளனர். மகாராஷ்டிர மாநில அரசு இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது.
Next Story






