என் மலர்
இந்தியா

சிறையில் சொகுசு வாழ்க்கை... கையும் களவுமாக சிக்கிய சுகேஷ் சந்திரசேகர்
- அமலாக்கத்துறையால் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
- சிறையில் ஆடம்பர பொருட்களும், பணமும் இருந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் அடைக்கப்பட்டிருந்த சிறையில் ஆடம்பர பொருட்களும், பணமும் இருந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
தொழிலதிபர்களை ஏமாற்றி பண மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறையால் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள மண்டோலா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் சிறையில் அவர் சொகுசாக வாழ்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது அறையில் போலீசார் நடத்திய சோதனையில், பணம், ஆடம்பர ஆடை, காலணிகள் உள்ளிட்ட பொருட்கள் இருப்பது தெரியவந்தது. சிறையில் இருந்த பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டனர்.
Next Story






