என் மலர்tooltip icon

    இந்தியா

    ஐ.எஸ்.ஐ. அமைப்புடன் தொடர்பு கொண்ட காலிஸ்தான் பயங்கரவாதி உ.பி.யில் கைது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஐ.எஸ்.ஐ. அமைப்புடன் தொடர்பு கொண்ட காலிஸ்தான் பயங்கரவாதி உ.பி.யில் கைது

    • காவல் துறை இயக்குநர் அமிதாப் யாஷ் தெரிவித்தார்.
    • ஐ.எஸ்.ஐ. செயல்பாட்டாளர்களுடன் நேரடி தொடர்பில் உள்ளார்.

    பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதியை உத்தர பிரதேச சிறப்பு படை மற்றும் பஞ்சாப் காவல் துறையினர் மேற்கொண்ட கூட்ட நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள ராம்தாஸ் பகுதியை அடுத்த குர்லியன் கிராமத்தில் வசிக்கும் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதியான லாஜர் மாசி இன்று அதிகாலை 3.20 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். கௌசாம்பியின் கோக்ராஜ் காவல் நிலைய பகுதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனை காவல் துறை இயக்குநர் அமிதாப் யாஷ் தெரிவித்தார்.

    "கிடைத்துள்ள தகவல்களின்படி, கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஜெர்மனியை சார்ந்த பாபர் கல்சா இன்டர்நேஷனல் (பி.கே.ஐ.) தலைவரான ஸ்வர்ன் சிங் என்கிற ஜீவன் ஃபௌஜிக்காக வேலை செய்கிறார். மேலும் இவர் பாகிஸ்தானை சார்ந்த ஐ.எஸ்.ஐ. செயல்பாட்டாளர்களுடன் நேரடி தொடர்பில் உள்ளார்" என்று யாஷ் கூறினார்.

    கைது செய்யப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து வெடிபொருட்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். இதில் மூன்று கை குண்டுகள், இரண்டு செயலில் உள்ள டெட்டனேட்டர்கள், ஒரு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கை துப்பாக்கி மற்றும் 13 வெளிநாட்டு தோட்டாக்கள் ஆகியவை அடங்கும் என்று அந்த அதிகாரி கூறினார்.

    Next Story
    ×