என் மலர்tooltip icon

    இந்தியா

    40 வருடங்களுக்கு முன் செய்த 2 கொலைகளை குற்றஉணர்வினால் ஒப்புக்கொண்டு சரணடைந்த நபர்..
    X

    40 வருடங்களுக்கு முன் செய்த 2 கொலைகளை குற்றஉணர்வினால் ஒப்புக்கொண்டு சரணடைந்த நபர்..

    • அவரது மூத்த மகன் இறந்த நிலையில் அவரது இளைய மகன் பலத்த காயமடைந்தார்.
    • கள் இல்லாததால், அந்த வழக்கும் அப்போது மூடப்பட்டதும் கண்டறியப்பட்டது.

    கேரளாவின் கொய்கோட்டைச் சேர்ந்த முகமது அலி (53) என்ற நபர் தான் 40 வருடங்களுக்கு முன் செய்த 2 கொலைகளை ஒப்புக்கொண்டு மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வெங்கரா காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

    அண்மையில் விபத்து ஒன்றில் அவரது மூத்த மகன் இறந்த நிலையில் அவரது இளைய மகன் பலத்த காயமடைந்தார். மேலும் குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனைகள் வந்துள்ளன. தனது கடந்த கால குற்றங்களே இதற்குக் காரணம் என்று அவர் நம்பினார். எனவே தொடர் குற்றவுணர்வின் காரணமாக அவர் காவல்துறையை அணுகி உண்மையைச் சொன்னார்.

    1986 ஆம் ஆண்டு, முகமது அலி (அப்போது 14 வயது) அடிக்கடி தன்னைத் துன்புறுத்தி வந்த 20 வயது இளைஞனை ஒரு நாள் உதைத்து கால்வாயில் தள்ளினார். அலி பயந்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இரண்டு நாட்கள் கழித்து அவர் திரும்பி வந்தபோது, அந்த இளைஞர் தண்ணீரில் இறந்து கிடந்தார். அப்போது யாரும் புகார் அளிக்க முன்வராததால், போலீசார் அதை ஒரு சாதாரண மரணமாகப் பதிவு செய்து வழக்கை முடித்து வைத்தனர்.

    பின்னர், 1989 ஆம் ஆண்டு வெள்ளாயில் கடற்கரையில் மற்றொரு நபரைக் கொன்றதாகவும் முகமது அலி ஒப்புக்கொண்டார். அந்த நேரத்தில் அங்கு அடையாளம் தெரியாத ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டதும் ஆதாரங்கள் இல்லாததால், அந்த வழக்கும் அப்போது மூடப்பட்டதும் கண்டறியப்பட்டது. இந்த இரண்டு வழக்குகள் தொடர்பான பழைய கோப்புகளை போலீசார் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.

    Next Story
    ×