என் மலர்tooltip icon

    இந்தியா

    கோழைத்தனமான முயற்சி.. நாய் பிரியரால் தாக்கப்பட்ட டெல்லி முதல்வர் ரேகா குப்தா ஓபன் ஸ்டேட்மென்ட்
    X

    கோழைத்தனமான முயற்சி.. நாய் பிரியரால் தாக்கப்பட்ட டெல்லி முதல்வர் ரேகா குப்தா ஓபன் ஸ்டேட்மென்ட்

    • அந்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் நாய் பிரியர் என்று தெரியவந்துள்ளது.
    • இப்போது நான் முன்பை விட அதிக ஆற்றலுடனும் அர்ப்பணிப்புடனும் உங்களுடன் இருப்பேன்.

    டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா இன்று காலையில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களை சந்தித்துக் கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் அவரை தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் நாய் பிரியர் என்றும் தெரு நாய்களை தெருக்களில் இருந்து அப்புறப்படுத்தி கூண்டுகளில் அடைக்கும் டெல்லி அரசின் முயற்சியை எதிர்த்து இந்த தாக்குதலை நடத்தினார் என்றும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் தன் மீதான தாக்குதல் குறித்து ரேகா குப்தா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "இன்று காலை ஜன் சன்வாய் நிகழ்ச்சியில் என் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என் மீது மட்டுமல்ல, டெல்லிக்கும் பொதுமக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற எங்கள் உறுதியின் மீதும் நடத்தப்பட்ட ஒரு கோழைத்தனமான முயற்சியாகும்.

    இந்த தாக்குதலுக்குப் பிறகு நான் அதிர்ச்சியில் இருந்தேன், ஆனால் இப்போது நான் நன்றாக உணர்கிறேன். எனது அனைத்து நலம் விரும்பிகளும் என்னை சந்திக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் விரைவில் உங்களுடன் பணியாற்றுவதைக் காணலாம்.

    இதுபோன்ற தாக்குதல்கள் எனது மன உறுதியையும் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எனது உறுதியையும் ஒருபோதும் உடைக்க முடியாது. இப்போது நான் முன்பை விட அதிக ஆற்றலுடனும் அர்ப்பணிப்புடனும் உங்களுடன் இருப்பேன்.

    ஜன் சன்வாய் மற்றும் பொதுப் பிரச்சினைகளைத் தீர்ப்பது முன்பு போலவே அதே தீவிரத்துடனும் அர்ப்பணிப்புடனும் தொடரும். உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் எனது மிகப்பெரிய பலமாகும்.

    உங்கள் மகத்தான அன்பு, ஆசீர்வாதம் மற்றும் நல்வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×