என் மலர்tooltip icon

    இந்தியா

    ரூ.200-க்கு வாங்கிய லாட்டரியில் அடித்த ரூ.1.25 கோடி பரிசு.. வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவான தம்பதி!
    X

    ரூ.200-க்கு வாங்கிய லாட்டரியில் அடித்த ரூ.1.25 கோடி பரிசு.. வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவான தம்பதி!

    • ராம் சிங் சமீபத்தில் ரூ.200க்கு ஒரு லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.
    • தனது மனைவியுடன் கிராமத்தை விட்டு வெளியேறி தலைமறைவாகினார்.

    பஞ்சாபின் பரித்கோட் மாவட்டத்தில் உள்ள சைடேக் கிராமத்தைச் சேர்ந்த நசீப் கவுர் மற்றும் அவரது கணவர் ராம் சிங், விவசாயத் தொழிலாளர்கள் ஆவர்.

    ராம் சிங் சமீபத்தில் ரூ.200க்கு ஒரு லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த சீட்டுக்கு குலுகலில் தேர்வாகவே, ரூ.1.5 கோடி பரிசுத் தொகையை ராம் சிங் வென்றார்.

    இந்த விஷயம் சுற்றியுள்ள கிராமங்களில் பரவினால் யாரவது தங்களை தாக்கிவிட்டு பணத்தை அபகரித்துக் கொள்வார்கள் என ராம் சிங்- நசீப் கவுர் தம்பதியினர் பயந்தனர்.

    இதனால் ராம் சிங் வீட்டைப் பூட்டி, தனது செல்போனை அணைத்துவிட்டு, தனது மனைவியுடன் யாருக்கும் சொல்லாமல் கிராமத்தை விட்டு வெளியேறி தலைமறைவாகினார்.

    இது குறித்து அறிந்ததும், பரித்கோட் போலீசார் ராம் சிங் மற்றும் நசீப் கவுரைத் தொடர்பு கொண்டனர்.

    மக்களின் பாதுகாப்பிற்காக தான் நாங்கள் இருக்கிறோம் என்றும், உங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதாகவும் போலீசார் அவர்களிடம் உறுதியளித்துள்ளனர். இதனால் தைரியம் அடைந்தராம் சிங் மற்றும் நசீப் கவுர் வீடு திரும்பினர்.

    Next Story
    ×