search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராஜஸ்தானில் ஆசிரியர் தேர்வு- வினாத்தாள் வெளியான விவகாரத்தில் 55 பேர் கைது
    X

    ராஜஸ்தானில் ஆசிரியர் தேர்வு- வினாத்தாள் வெளியான விவகாரத்தில் 55 பேர் கைது

    • ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு சில மணி நேரத்துக்கு முன்பாக அதற்கான வினாத்தாள் வெளியானது.
    • ஆசிரியர் தேர்வு வினாத்தாள் வெளியானதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுரேஷ் தாக்கா என்பவர் தலைமறைவாக உள்ளார்.

    உதய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மாவட்டத்தில் ஆசிரியர் பணிக்கான தேர்வு நேற்று முன்தினம் நடப்பதாக இருந்தது. இந்நிலையில் தேர்வுக்கு சில மணி நேரத்துக்கு முன்பாக அதற்கான வினாத்தாள் வெளியானது. அதையடுத்து ஆசிரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டு, தள்ளிவைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 37 தேர்வர்கள் உள்பட 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பெண்களும் அடங்குவர்.

    மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் அனைவரும் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டனர். ஆசிரியர் தேர்வு வினாத்தாள் வெளியானதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுரேஷ் தாக்கா என்பவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இந்த விவகாரத்தில் கைதானவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் டி.ஜி.பி. உமேஷ் மிஸ்ரா தெரிவித்தார்.

    Next Story
    ×