என் மலர்
இந்தியா

ஆயுர்வேத இருமல் மருந்து குடித்து 5 மாத பெண் குழந்தை பலி.. ம.பி.யில் மீண்டும் சோகம்
- 5 மாத பெண் குழந்தை ரூஹிக்கு இருமல் மற்றும் சளி இருந்தது.
- மருந்து குடித்த சில மணி நேரங்களுக்குள், குழந்தையின் உடல்நிலை மோசமடைந்தது.
மத்தியப் பிரதேசத்தில் போலி இருமல் மருந்துகளால் அண்மையில் 24 குழந்தைகள் உயிரிழந்தனர்.
இந்த சர்ச்சை தொடரும் நிலையில் தற்போது ஆயுர்வேத இருமல் மருந்து கொடுக்கப்பட்ட 5 மாத குழந்தையின் உயிரிழந்தது அதிர்ச்சிய ஏற்படுத்தி உள்ளது.
சிந்துவா மாவட்டத்தில் உள்ள பிச்வா கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் மினோட்டின் 5 மாத பெண் குழந்தை ரூஹிக்கு இருமல் மற்றும் சளி இருந்தது.
இதன் காரணமாக, அக்டோபர் 27 அன்று உள்ளூர் மருத்துவக் கடையில் கடைக்காரரின் ஆலோசனையின் பேரில் ஆயுர்வேத இருமல் சிரப்பை வாங்கி குழந்தையை அருந்த செய்துள்ளனர்.
மருந்து குடித்த சில மணி நேரங்களுக்குள், குழந்தையின் உடல்நிலை மோசமடைந்தது. குழந்தை உடனடியாக உள்ளூர் சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இருமல் மருந்து விற்கப்பட்ட மருத்துவக் கடை சீல் வைக்கப்பட்டு, மீதமுள்ள இருப்பு பறிமுதல் செய்யப்பட்டது.
மருந்து மாதிரிகள் அரசு ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பப்பட்டன. குடும்ப உறுப்பினர்களின் புகாரின் அடிப்படையில் பிச்வா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.






