என் மலர்
இந்தியா

நடந்து சென்றவர்கள் மீது பயங்கரமாக மோதிய கார்... சம்பவ இடத்திலேயே 5 பேர் பலி
- படுகாயமடைந்தவர்களை போலீசார் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
- காரை வேகமாக ஓட்டிவந்து 5 பேர் உயிரிழப்பிற்கு காரணமான கார் டிரைவரை கைது செய்தனர்.
சிம்லா:
இமாச்சல பிரதேச மாநிலம் வல்சாத் மாவட்டம் தரம்பூர் அருகே, சிம்லா-சண்டிகர் நெடுஞ்சாலையோரம் இன்று பொதுமக்கள் சிலர் வேலைக்கு நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது, நெடுஞ்சாலையில் வேகமாக வந்த ஒரு கார், கட்டுப்பாட்டை இழந்து நடந்து சென்றுகொண்டிருந்தவர்கள் மீது வேகமாக மோதியது.
இந்த கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். காரை வேகமாக ஓட்டிவந்து 5 பேர் உயிரிழப்பிற்கு காரணமான கார் டிரைவர் ராஜேசை கைது செய்தனர்.
Next Story






