என் மலர்
இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை
- ஃபுல்ரானி மற்றும் அன்கித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
- ஷிவானி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சனிக்கிழமை அதிகாலை தேஹர் கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. மனோகர் லோதி (45), அவரது மகள் ஷிவானி (18), மகன் அன்கித் (16), மற்றும் மனோகரின் தாய் ஃபுல்ரானி லோதி (70) ஆகியோரே உயிரிழந்தவர்கள்.
அவர்கள் சல்பாஸ் மாத்திரைகளை உட்கொண்ட நிலையில், ஃபுல்ரானி மற்றும் அன்கித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஷிவானி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், மனோகர் சாகர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார்.
தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மனோகர் லோதியின் மனைவி சில நாட்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






