search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவில் 4 கோடி பேர் இன்னும் ஒரு டோஸ் கூட தடுப்பூசி செலுத்தவில்லை
    X

    இந்தியாவில் 4 கோடி பேர் இன்னும் ஒரு டோஸ் கூட தடுப்பூசி செலுத்தவில்லை

    • அரசு தடுப்பூசி மையங்களில் 178.38 கோடி தடுப்பூசி டோஸ்கள் இலவசமாக செலுத்தப்பட்டுள்ளன.
    • 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு ஏப்ரல் 10ம் தேதியில் இருந்து பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுகிறது.

    புதுடெல்லி:

    கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

    ஜூலை 18ம்தேதி வரை, அரசு தடுப்பூசி மையங்களில் மொத்தம் 1,78,38,52,566 தடுப்பூசி டோஸ்கள் இலவசமாக செலுத்தப்பட்டுள்ளன. இது 97.34 சதவீதம் ஆகும். சுமார் 4 கோடி பேர் ஒரு தவணை கூட தடுப்பூசி செலுத்தவில்லை.

    மார்ச் 16ம் தேதி முதல் சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் இலவசமாக போடப்படுகிறது. 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு ஏப்ரல் 10ம் தேதியில் இருந்து பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசு தடுப்பூசி மையங்களில் 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, நாட்டில் 98 சதவீதம் பேர் குறைந்தது ஒரு தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 90 சதவீதம் பேர் இரண்டு தவணையும் செலுத்தி உள்ளனர்.

    Next Story
    ×