search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உயர் ரத்த அழுத்தத்தால் கேரளாவில் 37 சதவீதம் பேர் பாதிப்பு- மத்திய சுகாதார அமைச்சகம் அதிர்ச்சி தகவல்
    X

    உயர் ரத்த அழுத்தத்தால் கேரளாவில் 37 சதவீதம் பேர் பாதிப்பு- மத்திய சுகாதார அமைச்சகம் அதிர்ச்சி தகவல்

    • ரத்த அழுத்தத்தின் அளவு 120/80 ஆக இருந்தால், உடலில் ரத்த அழுத்தம் சீராக இருக்கிறது என்று அர்த்தம்.
    • தற்போது 16 சதவீத இறப்புகளுக்கு உயர் ரத்த அழுத்தமே அடிப்படை காரணமாக உள்ளது.

    இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ரத்த அழுத்த பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். ரத்த அழுத்தம் அதிகரித்தால் இதயம் தொடர்பான பல பிரச்சனைகள் நமக்கு ஏற்படுகின்றன. எனவே ரத்த அழுத்தம் சரியாக இருக்கின்றதா என்பதை நாம் அடிக்கடி பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

    அதற்கு ஒவ்வொரு நபரும் தனது ரத்த அழுத்த அளவை தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமானதாகும்.பொதுவாக ஒவ்வொருவருக்கும் உடலில் ரத்த அழுத்தம் என்பது மில்லி மீட்டர்ஸ் ஆஃப் மெர்குரி (mmHg) என்னும் அளவீடால் அளக்கப்படுகிறது. ரத்த அழுத்தத்தின் அளவு 120/80 ஆக இருந்தால், உடலில் ரத்த அழுத்தம் சீராக இருக்கிறது என்று அர்த்தம்.

    அதுவே 130/80-க்கு மேல் இருந்தால் உயர் ரத்த அழுத்தம் என்றும், 90/60 என்ற அளவிலோ அல்லது குறைவாகவோ இருந்தால் அதை குறைந்த ரத்த அழுத்தம் என்றும் கருதப்படுகிறது. ரத்த அழுத்தம் அதிகப்படியான மன அழுத்தம் காரணமாக ஏற்படுகிறது.

    இது ஒல்லியானவர்கள், பருமனானவர்கள் என்று அனைவருக்கும் பாரபட்சமின்றி வருகிறது. ஆனால் உலக அளவில் உடல் பருமனாக இருப்பவர்கள் தான் அதிக அளவில் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

    இந்நிலையில் உயர் ரத்த அழுத்த பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாட்டிலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட 1.7 மில்லியன் பேரிடம் உயர் ரத்த அழுத்தம் தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.

    அதில் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உயர் ரத்த அழுத்தம் பாதிப்பு மக்களுக்கு அதிகமாக உள்ளது தெரிய வந்துள்ளது. அதிலும் கேரள மாநிலத்தில் உயர் ரத்த அழுத்தத்தால் 37 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட் டங்களிலுமே உயர் ரத்த அழுத்தத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் திருச்சூர் மாவட்டம் முதலி டத்தில் உள்ளது. அங்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு 62 சதவீதமாக உள்ளது.

    அதற்கு அடுத்தபடியாக பத்தினம்திட்டா மாவட் டத்தில் 46.2 சதவீதமும், மலப்புரம் மாவட்டத்தில் 26.7 சதவீதமும் பாதிப்பு உள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் இந்த அறிக்கை கேரளாவில் நிலவும் அபாயகரமான நிலையை விளக்குகிறது.

    உயர் ரத்த அழுத்தம் காரணமாக இறப்பு விகிதம் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. தற்போது 16 சதவீத இறப்புகளுக்கு உயர் ரத்த அழுத்தமே அடிப்படை காரணமாக உள்ளது. இந்தியாவில் உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 12 லட்சம் முதல் 16 லட்சம் பேர் வரை உயிரிழப்பதாகவும், 2035-ம் ஆண்டு இது 20 லட்சத்தை எட்ட கூடும் என்று மத்திய சுகாதார அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா பாதிப்பிற்கு பிறகு கேரளாவில் திடீரென கீழே விழுந்து இறந்த வர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற பல கொடிய நோய்கள் கேரளாவில் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒரு காலத்தில் சுகாதாரத்தில் முன்னுதாரணமாக விளங்கிய கேரளாவில் தற்போது ஒவ்வொரு சீசனிலும் பல்வேறு நோய்கள் பரவுகின்றன.

    உணவு பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட வாழ்க்கை முறைகளில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களே இத்தகைய உயிர் கொல்லி நோய்களின் அதிகரிப்புக்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கேரளாவில் துரித உணவு கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது.

    ஷவர்மா உள்ளிட்ட அரேபிய உணவுகளை பலர் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதன் காரணமாக ஏராளமான ஒரு பலவிதமான உடல் உபாதைகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர். பல கொடிய நோய்கள் பரவுவதற்கு இது போன்ற உணவு முறைகளை பின்பற்றுவதே காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    ஆகவே உணவு உண்ணுதல், உடற்பயிற்சி செய்தல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தி உள்ளனர். மேலும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையை, கேரள அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதும் அவர்களது கோரிக்கையாக இருக்கிறது.

    Next Story
    ×