search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 28,572 விவசாயிகள் தற்கொலை
    X

    இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 28,572 விவசாயிகள் தற்கொலை

    • நாட்டில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை மொத்தம் 28 ஆயிரத்து 572 விவசாயிகள் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
    • தெலுங்கானாவில் 3 ஆயிரத்து 55 பேரும், மத்திய பிரதேசத்தில் ஆயிரத்து 226 பேரும் தற்கொலை செய்திருக்கிறார்கள்.

    புதுடெல்லி:

    நாட்டில் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருந்தார். அதில் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக கடந்த 2017 முதல் 2021 வரையிலான 5 ஆண்டுகளின் புள்ளி விவர பட்டியலும் இணைக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி, நாட்டில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை மொத்தம் 28 ஆயிரத்து 572 விவசாயிகள் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 12 ஆயிரத்து 552 பேர் தற்கொலை செய்துள்ளனர். கர்நாடகத்தில் 6 ஆயிரத்து 95 பேர் தற்கொலை செய்துள்ளனர். தெலுங்கானாவில் 3 ஆயிரத்து 55 பேரும், மத்திய பிரதேசத்தில் ஆயிரத்து 226 பேரும் தற்கொலை செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் 171 பேர் உயிரை மாய்த்துள்ளனர்.

    இந்த தற்கொலைகளுக்கான தனிப்பட்ட காரணங்கள் எதுவும் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலை அறிக்கையில் கூறப்படவில்லை எனவும் பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×