என் மலர்tooltip icon

    இந்தியா

    தானே- நவிமும்பை இடையே 26 கி.மீ. பறக்கும் சாலை: சிட்கோ திட்டம்
    X

    தானே- நவிமும்பை இடையே 26 கி.மீ. பறக்கும் சாலை: சிட்கோ திட்டம்

    • நவிமும்பை விமான நிலையத்தில் ஜூன் மாதம் முதல் விமான சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • மும்பை- நவிமும்பையை இணைக்கும் வகையில் ‘அடல்சேது’ கடல் பாலம் கட்டப்பட்டுள்ளது.

    மும்பை:

    நவிமும்பையில் சர்வதேச தரத்தில் விமான நிலையம் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. நவிமும்பை விமான நிலையத்தில் ஜூன் மாதம் முதல் விமான சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் நவிமும்பை விமான நிலையம்- தானே இடையே 26 கி.மீ. தூரத்துக்கு பறக்கும் சாலை அமைக்க சிட்கோ (நகர மற்றும் தொழில் மேம்பாட்டு கழகம்) திட்டமிட்டுள்ளது.

    மும்பை- நவிமும்பையை இணைக்கும் வகையில் 'அடல்சேது' கடல் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் நவிமும்பை விமானநிலையத்தை தானேயுடன் இணைக்கும் வகையில் ரூ.8 ஆயிரம் கோடி செலவில் பறக்கும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி திகா பத்னி மைதானம் அருகில் உள்ள தான் நிரான்கரி சவுக்கில் இருந்து வாஷி பாம் பீச் வரை 17 கி.மீ.க்கு பறக்கும் சாலை அமைக்கப்படுகிறது.

    அதன்பிறகு பாம் பீச் ரோட்டில் இருந்து நவிமும்பை விமான நிலையத்துக்கு நேரடியாக இரட்டை பறக்கும் சாலை அமைக்கப்பட உள்ளது.

    Next Story
    ×