என் மலர்tooltip icon

    இந்தியா

    சோனியா காந்தி
    X
    சோனியா காந்தி

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா உறுதி

    இதையடுத்து தனிமைப்படுத்திகொண்ட சோனியா காந்திக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
    புது டெல்லி:

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 

    சோனியா காந்தி, கடந்த சில நாட்களாக தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து உரையாடி வரும் நிலையில், நேற்று அவருக்கு  லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

    இதையடுத்து தனிமைப்படுத்திகொண்ட அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. 

    அவர் தற்போது குணமடைந்து வருவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
    Next Story
    ×