என் மலர்

  இந்தியா

  பயங்கரவாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்
  X
  பயங்கரவாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்

  ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை- பாதுகாப்பு படையினர் அதிரடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  என்கவுண்டர் நடைபெற்ற இடத்தில் இருந்து ஏகே47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
  பாரமுல்லா:

  ஐம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள நஜிபத் பகுதியில் உள்ளூர் போலீசார், பாதுகாப்பு படையினர் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். 

  பாதுகாப்பு படையின நடத்திய பதில் தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அலி பாய், ஹனீப் பாய் மற்றும் ஷா வாலி என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. 

  இந்த சண்டையில் முதாசிர் அகமது ஷேக் என்ற காவலரும் உயிரிழந்தார்.  அவரது இழப்பால் வேதனை அடைந்தாலும் மூன்று பயங்கரவாதிகளைக் கொன்றது மிகப்பெரிய வெற்றி என்று காஷ்மீர் மண்டல இன்ஸ்பெக்டர் ஜெனரல்  விஜய் குமார் தெரிவித்தார். 

  மூன்று பயங்கரவாதிகளும் பெரிய தாக்குதலை நடத்தும் திட்டத்துடன் ஸ்ரீநகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தாகவும் அவர் குறிப்பிட்டார். பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட பகுதியில் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள், துப்பாக்கிக் குண்டுகள், ஐந்து சீன கையெறி குண்டுகள், வெடிமருந்துகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Next Story
  ×