search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வளர்ப்பு நாயுடன் சஞ்சீவ் கிர்வார்,  ரிங்கு டுக்கா
    X
    வளர்ப்பு நாயுடன் சஞ்சீவ் கிர்வார், ரிங்கு டுக்கா

    வளர்ப்பு நாய் நடை பயிற்சிக்கு விளையாட்டு மைதானத்தை பயன்படுத்திய அதிகாரி மீது மத்திய அரசு நடவடிக்கை

    தலைநகரில் உள்ள அனைத்து மைதானங்களையும் வீரர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்களுக்காக இரவு 10 மணி வரை திறந்திருக்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக பணிபுரியும் சஞ்சீவ் கிர்வாரும்,  அதிகாரியாக உள்ள அவரது மனைவி ரிங்கு டுக்காவும், தியாகராஜ விளையாட்டு மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த  வீரர்களை உடனடியாக வெளியேறுமாறு கூறியதாக புகார் எழுந்தது. 

    பின்னர் தனது வளர்ப்பு நாயுடன் அவர்கள் அந்த மைதானத்தில் நடந்து செல்லும் புகைப்படம் சமூக வலைதங்களில் வைரலானது.  

    தியாகராஜ் ஸ்டேடியத்தில் உள்ள வசதிகளை சஞ்சய் கிர்வார் மற்றும் அவரது மனைவி ரிங்கு துக்கா தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக ஊடங்களின் வெளியான செய்திகளின் அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு டெல்லி தலைமைச் செயலாளருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

    தலைமைச் செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் சஞ்சீவ் கிர்வார் ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதிக்கும், அவரது மனைவியை அருணாசலப் பிரதேசத்திற்கும் இடமாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

    இதனிடையே விளையாட்டு வீரர்கள் கூறிய குற்றச்சாட்டை தியாகராஜ் மைதான நிர்வாகி அஜித் சவுத்ரி மறுத்துள்ளார். 

     பயிற்சி பெறுவதற்கான அதிகாரப்பூர்வ நேரம் இரவு 7 மணி வரைதான் என்றும், அதன் பிறகு பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தாமாகவே வெளியேறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில், தேசிய தலைநகரில் உள்ள அனைத்து மைதானங்களும், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்காக இரவு 10 மணி வரை திறந்திருக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×