என் மலர்

  இந்தியா

  கொலை செய்யப்பட்ட இடம்
  X
  கொலை செய்யப்பட்ட இடம்

  காதல் தோல்வி - பெண்ணை கொலை செய்த வாலிபர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இளம் பெண்ணை கொலை செய்த வாலிபர், பலகட்ட விசாரணைக்கு பிறகு நேற்று கைது செய்யப்பட்டார்.
  பனாஜி:

  கோவாவில் 26 வயதான வாலிபர் ஒருவர், தன்னுடனான காதலை முறித்த இளம்பெண்ணை கொலை செய்த சம்பவம் பரபரப்பை 

  ஏற்படுத்தியுள்ளது.

  கொலை செய்யப்பட்ட தியா நாயக் (19 வயது)  கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவர் 26 வயதான கிஷன் கலங்குட்கரை காதலித்து 

  வந்துள்ளார். இவர்கள் கடந்த புதன்கிழமை தெற்கு கோவா, வெல்சன் கடற்கரைக்கு சென்றுள்ளனர்.  

  அப்போது தியா நாயக், கிஷனுடனான காதல் உறவை முறித்து கொள்ள இருப்பதாக கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர் 

  கத்தியால் தியா நாயக்கை பலமுறை குத்தி கொன்று விட்டு கடற்கரை அருகில் உள்ள புதர்களில் உடலை வீசி விட்டு சென்றுள்ளார்.

  இந்நிலையில், தியா நாயக் உடலை கண்டுபிடித்த வாஸ்கோ போலீசார் பல கோணங்களில் விசாரணையை மேற்கொண்டு நேற்று 

  கொலையாளியான கிஷன் கலங்குட்கரை கைது செய்தனர்.
  Next Story
  ×