என் மலர்

  இந்தியா

  நிலச்சரிவு (கோப்பு படம்)
  X
  நிலச்சரிவு (கோப்பு படம்)

  நிலச்சரிவில் சிக்கி தரைமட்டமான வீடு- 2 பேர் உயிரிழப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அருணாச்சல பிரதேசத்தில், நிலச்சரிவில் சிக்கி தரைமட்டமான மூங்கில் வீட்டில் சிக்கியுள்ள ஒருவரை மீட்கும் பணி நடைபெறுகிறது.
  இடாநகர்:

  அருணாச்சல பிரதேச மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். 

  இந்நிலையில், இடாநகர் பஞ்சாபி தாபா அருகே நேற்று ஏற்பட்ட நிலச்சரிவினால், தகர கூரையுன் கூடிய ஒரு மூங்கில் வீடு தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இன்னும் ஒருவர் சிக்கி உள்ளார். அவரை மீட்கும் பணி நடைபெறுகிறது. மோசமான வானிலை நிலவுவதால் மீட்பு பணி சவாலாக உள்ளது.

  தொடர்ந்து மழை பெய்து வருவதால், இடா நகர் அரசு மேல்நிலைப் பள்ளி, நகர்லகுனில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் பந்தர்தேவாவில் உள்ள நிகும் நியா ஹால் ஆகியவை தற்காலிக நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. அங்கு பொதுமக்கள் தங்கவைக்கப்படுகின்றனர்.
  Next Story
  ×