என் மலர்

  இந்தியா

  சாலை விபத்தில் சேதம் அடைந்த கார்
  X
  சாலை விபத்தில் சேதம் அடைந்த கார்

  மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்த சாலை விபத்துக்களில் 13 பேர் உயிரிழப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த இரு விபத்துக்களில் காயமடைந்த 11 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
  அகமத்நகர்:

  மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தில் ஆட்டோ மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில், ஆட்டோவில் பயணம் செய்த இரண்டு மாணவர்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.  மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். 

  மும்பையில் இருந்து சுமார் 240 கிமீ தொலைவில் உள்ள கோபர்கான் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மசூத்பூர் ஃபாட்டா அருகே இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

  காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

  இதேபோல் உத்தர பிரதேச மாநிலம் அசிம் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

  மொராதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் டொயோட்டா இன்னோவா காரில் ராம்பூரில் திருமண விழாவில் கலந்து கொள்ளச் சென்று கொண்டிருந்தனர். 

  அப்போது கார் மின்கம்பத்தில் மோதி பின்னர் சாலையோர மரத்தில் மோதியதாக காவல்துறை கண்காணிப்பாளர் அசோக் குமார் தெரிவித்தார். இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  மேலும் 4 பேர் பலத்த காயமடைந்து மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அசோக் குமார் குறிப்பிட்டுள்ளார். 

  எனினும் அந்த காரில்  இருந்த ஒரு குழந்தை காயமின்றி தப்பியதாக அவர் கூறினார். சம்பவ இடத்துக்கு விரைந்த எஸ்.பி. தலைமையிலான காவலர்கள்
  இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  Next Story
  ×