என் மலர்

  இந்தியா

  பிரதமர் மோடி
  X
  பிரதமர் மோடி

  நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும்- பிரதமர் மோடி உரை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ்நாட்டில் இருந்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரியும் இதில் பங்கேற்றனர்.
  நாட்டில் உள்ள 25 ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதிகளுக்கான 39வது மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது. 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெற்றது.

  இந்த மாநாட்டில் பேசிய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தங்கள் சீரிய முயற்சியால் ஒரே ஆண்டில் 126 ஐகோர்ட்டு நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இதன் பிறகு நீதிமன்ற கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், காலி பணியிடங்களை நிரப்புதல். சட்ட சீர்திருத்தங்கள் உள்ளிட்ட 6 அம்சங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்றது.

  இதன் தொடர்ச்சியாக அனைத்து மாநில முதல் மந்திரிகள், அனைத்து ஐகோர்ட்டு நீதிபதிகள் பங்கேற்ற மாநாடு டெல்லியில் இன்று நடந்தது.

  முதல்மந்திரிகள், தலைமை நீதிபதிகள் பங்கேற்ற இந்த தேசிய கருத்தரங்கை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

  கோர்ட்டுகளில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும். இது நாட்டின் சாதாரண மக்களுக்கு நீதித்துறை மீது நம்பிக்கையை அதிகரிக்கும்.

  தீர்ப்புகள் என்பது சாமானிய மக்களும் புரிந்து கொள்ளக்கூடிய மொழிகளில் இருக்க வேண்டும். புரிந்துகொள்ள முடியாவிட்டால் அது வெறும் உத்தரவாக மட்டுமே பார்க்கப்படும். தவிர நீதியாக இருக்காது.

  மருத்துவம், சட்டம், தொழில்நுட்ப படிப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமே ஏன் பயிற்றுவிக்கப்படுகிறது.

  ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு செயல்பாடுகள் ஆங்கில மொழியில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. மொழி என்பது நீதியை பெறுவதற்கு ஒரு வகையான தடையாக இருக்கிறது.

  நீதியை எளிதாக வழங்குவதற்கு காலாவதியான சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று முதல் மந்திரிகளை கேட்டுக் கொள்கிறேன்.

  2015ம் ஆண்டில் பொருத்தமற்றதாக மாறிய சுமார் 1,800 சட்டங்களை நாங்கள் கண்டறிந்தோம். இதில் 1,450 மத்திய அரசின் சட்டங்கள் நீக்கப்பட்டன. ஆனால் அத்தகைய 75 சட்டங்கள் மட்டுமே மாநிலங்களிகளால் ரத்து செய்யப்பட்டன.

  இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவை கொண்டாடும் வேளையில் நீதி எளிதிலும், விரைவாகவும், அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வகையில் நீதித்துறை அமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

  நீதித்துறையை மேம்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். நீதித்துறை உள் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

  இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

  சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா நிகழ்ச்சியில் பேசியதாவது:

  பெண் நீதிபதிகள் நீண்ட நேரம் நீதிமன்றத்தில் அமர பயப்படக்கூடிய நிலைமைதான் தற்போது இருக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் நீதிமன்றங்களி்ன் வளாகங்களில் நிலைமை மோசமாக இருக்கிறது.

  கோர்ட்டுகளை அதிக அளவில் அரசாங்கங்கள்தான் அணுகுகின்றன. போலீஸ், அரசு அதிகாரிகள் முறையாக நடந்தால் கோர்ட்டை நாடக்கூடிய தேவை குறைவாகவே இருக்கும்.

  நாடு முழுவதும் சுமார் 4 கோடி வழக்குகளின் விசாரணை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. 10 லட்சம் பேருக்கு ெவறும் 20 நீதிபதிகள்தான் இருப்பதால் வழக்குகளை சமாளிக்க போதுமானதாக இல்லை.

  இவ்வாறு அவர் பேசினார்.

  மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ வும் கூட்டத்தில் உரையாற்றினார்.

  யோகி ஆதித்யநாத், மம்தா பானர்ஜி, பசவராஜ் பொம்மை, பூபேஷ் பாகல், பிப்லப் தேவ் உள்ளிட்ட முதல்மந்திரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

  தமிழ்நாட்டில் இருந்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரியும் இதில் பங்கேற்றனர்.
  Next Story
  ×