search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்
    X
    பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

    வெப்ப நிலை அதிகரிப்பு எதிரொலி- மே 14-ம் தேதி முதல் கோடை விடுமுறையை அறிவித்தது பஞ்சாப்

    பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப நிலை சாதாரண வரம்புகளை விட சில புள்ளிகள் அதிகமாகவே காணப்படுகிறது.
    பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் கடும் வெப்ப நிலை காரணமாக, வரும் மே 14-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

    கடந்த சில நாட்களாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப நிலை சாதாரண வரம்புகளை விட சில புள்ளிகள் அதிகமாகவே காணப்படுகிறது. அமிர்தசரஸில் அதிகபட்ச வெப்பநிலை 42.3 டிகிரி செல்சியசும், லூதியானாவில் 43.2 டிகிரி செல்சியசும் மற்றும் ஜலந்தரில் 42.7 டிகிரி செல்சியசும் பதிவாகி உள்ளது.

    இந்நிலையில் இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    பஞ்சாப் மாநிலத்தில் நிலவி வரும் கடுமையான வெப்பம் காரணமாக ஆயிரக்கணக்கான பொற்றோர்களும், ஆசிரியர்களின் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு வரும் மே 14-ம் தேதி முதல் பஞ்சாபின் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இதையும் படியுங்கள்.. தொழிலாளர்களின் உழைப்பால்தான் இந்த உலகம் இயங்குகிறது- ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மே தின வாழ்த்து
    Next Story
    ×