என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி ஏழுமலையான் கோவில்
    X
    திருப்பதி ஏழுமலையான் கோவில்

    திருப்பதியில் ஒரே நாளில் 61 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம்

    திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வசூல் ஒரே நாளில் ரூ.4 கோடியை தாண்டியுள்ளது.
    திருமலை:

    திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் கொரோனா பரவல் நேரத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பின்னர் கூடுதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதனால் திருப்பதி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.

    நேற்று முன்தினம் 61 ஆயிரத்து 224 பக்தர்கள் திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.  33 ஆயிரத்து 930 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானம் ரூ.4 கோடியே 2 லட்சம் ஆக இருந்தது என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×