search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பினராயி விஜயன்
    X
    பினராயி விஜயன்

    கேரளாவில் கே ரெயில் திட்டத்திற்கு அனுமதி வழங்குவதில் சிக்கல்- ரெயில்வே மந்திரி தகவலால் பினராயி விஜயன் அதிர்ச்சி

    கேரளாவில் இத்திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியினரும் போராட்டத்தில் குதித்தனர். கே ரெயில் திட்டத்திற்காக நிறுவப்பட்ட எல்லை கற்களையும் அகற்றிய அவர்கள் அரசை கண்டித்து மறியல் போராட்டமும் நடத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கூட்டணி அரசு,சில்வர்லைன் எனப்படும் கே ரெயில் அதிவேக ரெயில்பாதை திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது.

    இதற்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை அரசு தொடங்கியது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இத்திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த வைக்கப்பட்ட எல்லை கற்களையும் அகற்றினர். இதனால் கேரளா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், நேற்று டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது கேரளாவில் கொண்டுவரப்படும் கே ரெயில் திட்டத்தை நிறைவேற்ற ஆதரவு தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

    பிரதமரை சந்தித்தபின்பு, டெல்லியில் நிருபர்களை சந்தித்த பினராயி விஜயன், பிரதமருடனான சந்திப்பு, நம்பிக்கை தருவதாக இருந்தது என்று கூறினார். மேலும் இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

    பினராயி விஜயன் பேட்டி அளித்த சிறிது நேரத்தில் டெல்லி மேல் சபையில் கேரள எம்.பி.க்கள் சிலர் இப்பிரச்சினையை எழுப்பினர். இதற்கு ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்து பேசினார். அவர் கூறியதாவது:-

    கேரளாவில் செயல் படுத்தப்பட உள்ள கே ரெயில் திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இத்திட்டத்திற்கு பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். எனவே கேரள மக்களின் நலனை கருத்தில் கொண்டே இத்திட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும், என்றார்.

    இதற்கிடையே கேரளாவில் இத்திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியினரும் போராட்டத்தில் குதித்தனர்.

    கே ரெயில் திட்டத்திற்காக நிறுவப்பட்ட எல்லை கற்களையும் அகற்றிய அவர்கள் அரசை கண்டித்து மறியல் போராட்டமும் நடத்தினர்.

    இதையும் படியுங்கள்... இந்தியாவில் 3 நாட்களுக்கு பிறகு சற்று குறைந்த கொரோனா தினசரி பாதிப்பு

    Next Story
    ×